என்னால முடியாது... நானே கவலைல இருக்கேன்... விருது வாங்கிவிட்டு பேசாமல் சென்ற கோலி...ரசிகர்கள் சோகம்!
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைய இந்திய அணி வீரர்கள் கண்கலங்கி நின்றனர்.
உலகக்கோப்பை தொடருக்கான தொடர் நாயகன் விருது பெற்ற விராட் கோலி, பேட்டியளிக்கும் மனநிலையில் இல்லை என்று கூறி விலகி சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைய இந்திய அணி வீரர்கள் கண்கலங்கி நின்றனர்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெற்றி பெற்ற ஆஸ்திரேலிாவுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு, கலங்கிய கண்களுடன் ஓய்வறை நோக்கி ஓடினார். வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் மைதானத்தில் கதறி அழுது கண்ணீர் விட, அவரை தேற்ற முடியாமல் பும்ரா, கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் ஆறுதல் கூறினர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கலங்கிய கண்கள் கேமராவில் தெரிய வேண்டாம் என்று தொப்பியை கொண்டு முகத்தை மூடிக் கொண்டு ஓய்வறைக்கு சென்றார்.
இந்திய அணி வீரர்களை தேற்ற முடியாமல் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திணறிய நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் நேரில் வந்து ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் 3 சதங்கள், 6 அரைசதங்கள் என்று மொத்தமாக 765 ரன்கள் விளாசிய விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
அதனை கலங்கிய கண்களுடன் மேடையில் வாங்கிய விராட் கோலி, எந்த கருத்தும் சொல்லாமல் உடனடியாக வெளியேறிய நிலையில், அது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.
விராட் கோலியை எதிர்பார்த்து ரவி சாஸ்திரி கேள்விகளை கேட்க தயாரான நிலையில், நேரடியாக கைகளை காட்டி பேசும் மனநிலையில் இல்லை என்று கோலி சிக்னல் கொடுக்க விராட் கோலியை பற்றி எதுவும் பேசாமல் அடுத்த விருதுக்கான வீரரை ரவி சாஸ்திரி, அறிவித்தார்.