இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு வந்த ஆப்பு! இலங்கை வென்றால் இந்தியாவுக்கு வாய்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற நிலையில், இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு வந்த ஆப்பு! இலங்கை வென்றால் இந்தியாவுக்கு வாய்ப்பு!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற நிலையில், இந்திய அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பெற்ற தோல்வி இந்தியாவின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பாதித்துள்ளதுடன், இந்திய அணி இனி இறுதிப்போட்டிக்கு நேரடியாக செல்ல ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு டெஸ்டில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

இந்தியா இன்னும் சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலிய மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் இந்தியா குறைந்த பட்சம் நான்கு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் டிராவை சந்திக்க வேண்டும். 

அப்படி இருந்தால் இந்திய அணி அதிகபட்சமாக 67.54 வெற்றி சதவீதத்திற்கு செல்வதுடன், ஒருவேளை இந்தியா இந்த இலக்கை அடையாத பட்சத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் வென்றால் அவர்கள் இறுதி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஐந்து டெஸ்ட் போட்டியிலும் இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதில் ஆஸ்திரேலியா ஏழு போட்டிகளுமே வெற்றி பெற்றால், 76.32 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கும் என்றாலும், ஐந்து டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்றால், அதேநேரம் தென்னாபிரிக்கா அனைத்து போட்டிகளின் வென்றால் தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு சென்று விடும்.

தற்போது வங்கதேசத்துக்கு எதிராக இரண்டு டெஸ்ட், இலங்கைக்கு எதிராக இரண்டு டெஸ்ட் பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் என மொத்தம் ஆறு போட்டிகளில் தென்னாப்பிரிக்கா விளையாட உள்ளது. 

இதில் ஆறிலும் தென் ஆப்பிரிக்கா வென்றால் அவர்கள் இறுதிப்போட்டிக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெற்றிகளை பெற வேண்டும்.

அவ்வாறு வெற்றியைப் பெற்றால் இலங்கையால் 69 புள்ளிகளை பெற்று இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் என்பதுடன்,  ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தலா ஒவ்வொரு டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வெற்றிப்பெற்றால், இந்திய அணி இன்னும் மூன்று டெஸ்ட்களில் வென்றால் இறுதிப்போட்டிக்கு செல்ல முடியும் .

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...