அவுஸ்திரேலிய அணியில் தோல்வியால் இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்... அரையிறுதிக்கு செல்ல இத செஞ்சாகணும்!
ஆஸ்திரேலிய அணியை சாய்க்க முக்கிய காரணம், நவீன் உல் ஹக் 3/20 மற்றும் குல்பதீன் நைப் 4/20 ஆகியோர்தான். மிரட்டலாக பந்துவீசினார்கள்.
டி20 உலகக்கிண்ணத்தின் சூப்பர் 8 ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில், ஓபனர்கள் குர்பஸ் மற்றும் இப்ராஹிம் ஜோர்டான் ஆகியோர் தொடர்ந்து மிரட்டலாக விளையாடி அரை சதம் அடித்தார்கள்.
ஓபனர்கள் இருவரும் சேர்ந்து 118/0 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தனர். குர்பஸ் 60 (49), ஜோர்டான் 51 (48) இருவரும் ஆட்டமிழந்தப் பிறகு, மற்ற பேட்டர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அடுத்துக் களமிறங்கிய அஜ்மதுல்லா 2 (3), கரீம் ஜனத் 13 (9), ரஷித் கான் 2 (5), முகமது நபி 10 (4) போன்றவர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஷாக் கொடுத்தனர். இதனால், ஆப்கானிஸ்தான் அணியால் 148/6 ரன்களைதான் அடிக்க முடிந்தது.
கடந்த போட்டியைப் போலவே, தற்போதும் கம்மின்ஸ் ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தினார். ஒரு உலகக் கோப்பையில், தொடர்ச்சியாக 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே வீரராக கம்மின்ஸ் சாதனை படைத்துள்ளார்.
இலக்கை துரத்திக் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில், கிளென் மேக்ஸ்வெல் 59 (41) மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார். மற்றவர்கள் படுமோசமாக சொதப்பினார்கள். டிராவிஸ் ஹெட் 0 (3), வார்னர் 3 (8) என யாருமே பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை.
மேலும், மிட்செல் மார்ஷ் 12 (9), ஸ்டாய்னிஸ் 11 (17), டிம் டேஇட் 2 (4) என யாருமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால், ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 127/2 ரன்களை மட்டும் சேர்த்து, 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஆஸ்திரேலிய அணியை சாய்க்க முக்கிய காரணம், நவீன் உல் ஹக் 3/20 மற்றும் குல்பதீன் நைப் 4/20 ஆகியோர்தான். மிரட்டலாக பந்துவீசினார்கள்.
தற்போது, ஆப்கானிஸ்தான் அணியும் ஒரு வெற்றியைப் பெற்றுவிட்டதால், இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு மெகா வெற்றியைப் பெற்றாக வேண்டும்.
ஒருவேளை இந்திய அணி தோற்கும் பட்சத்தில், ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில், வங்கதேசத்திடம் தோற்க வேண்டும் என்ற நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.