டி20 போட்டிகளில் எந்த அணியும் செய்யாத சாதனை... தோல்வியிலும் ஆர்சிபி படைத்த சரித்திரம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, 25 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, 25 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது.
எனினும், டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மாபெரும் சாதனை படைத்தது.
இதுவரை 13000க்கும் அதிகமான டி20 போட்டிகள் நடந்துள்ளன. இந்த நிலையில் பெங்களூரு அணி எந்த அணியும் செய்யாத சேஸிங் சாதனையை செய்துள்ளது.
முதலில் துடுப்பாட்டம் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 287 ரன்கள் குவித்ததுடன், டி20 போட்டிகள் வரலாற்றிலேயே இதுவே இரண்டாவது மிகப் பெரிய ஸ்கோர் ஆகும்.
அதுமட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் இதுவே ஒரு அணி எடுத்த மிகப் பெரிய ஸ்கோர் இதுதான்.
இந்த நிலையில், 288 ரன்களை சேஸிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் குவித்தது.
இதனால், டி20 கிரிக்கெட் வரலாற்றில் சேஸிங்கில் மிக அதிக ஸ்கோர் அடித்த அணி என்ற சாதனையை பெங்களூரு அணி தனதாக்கி உள்ளது.
இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் சேர்ந்து 549 ரன்கள் குவித்த நிலையில், டி20 வரலாற்றிலேயே ஒரே போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
அது மட்டுமல்லாமல், இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 38 சிக்ஸர்கள் அடித்த நிலையில், ஐபிஎல் வரலாற்றிலும், ஒட்டுமொத்த டி20 போட்டிகள் வரலாற்றிலும் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர் அடிக்கப்பட்டதும் இந்தப் போட்டியில் தான்.
அதே போல ஒரே போட்டியில் அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட சாதனையும் இந்தப் போட்டியில் நடந்தேறி உள்ளதுடன், மொத்தம் 43 ஃபோர் மற்றும் 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதன் மூலம் 81 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளன.
இது ஐபிஎல் வரலாற்றில் மிக அதிக பவுண்டரிகள் அடிக்கப்பட்ட போட்டியாகவும் மாறி உள்ளது.
மேலும், இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியின் ட்ராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதம் அடித்த நிலையில், ஐபிஎல் தொடரில் இது நான்காவது அதிவேக சதமாக பதிவாகி உள்ளது.