சிஎஸ்கேவின் கேப்டன் ரோஹித் சர்மா தான்.. ருதுராஜ் தற்காலிகமே... முன்னாள் வீரர் அதிரடி தகவல்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருந்தாலும் அவர் ரோஹித் சர்மா வரும் வரை தற்காலிக கேப்டன் தான் என  கணித்துள்ளார்.

சிஎஸ்கேவின் கேப்டன் ரோஹித் சர்மா தான்.. ருதுராஜ் தற்காலிகமே... முன்னாள் வீரர் அதிரடி தகவல்!

2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்படுவார் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளமை வைரலாகி வருகின்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இருந்தாலும் அவர் ரோஹித் சர்மா வரும் வரை தற்காலிக கேப்டன் தான் என  கணித்துள்ளார்.

இந்த தகவலை ஐபிஎல் தொடரின் வர்ணனையாளர்களில் ஒருவராக இருக்கும் மைக்கேல் வாகன் கூறி இருப்பதுதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதால், ரோஹித் சர்மா கடும் அதிருப்தி அடைந்து உள்ளார்.

ஹர்திக் பாண்டியா மறைத்த உண்மை... ரோஹித் வைக்கப் போகும் ஆப்பு... இந்திய அணியில் ஏற்பட்டுள்ள ட்விஸ்ட்

இதேவேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இதுவரை செயற்பட்ட தோனி தனது கடைசி ஐபிஎல் தொடரில் ஆடி வருகின்றார்.

இந்த நிலையில், கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட் வசம் அளித்து இருக்கிறார். இந்த நிலையில், மைக்கேல் வாகன் கூறியுள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp