தென்னாப்பிரிக்கா வெற்றிப்பெற வேண்டும் என்று நினைத்தேன் - இந்திய அணியின் இளம் வீரர் அதிரடி

2024 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.

தென்னாப்பிரிக்கா வெற்றிப்பெற வேண்டும் என்று நினைத்தேன் - இந்திய அணியின் இளம் வீரர் அதிரடி

2024 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. தென்னாப்பிரிக்கா அணி ஒரு கட்டத்தில் வெற்றி பெறுவது போன்ற நிலைக்கு வந்தது. 

30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது துருவ் ஜுரேல், தான் தென்னாப்பிரிக்கா இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என நினைத்ததாகவும், அவர்களை ஆதரித்ததாகவும் கூறினார்.

தான் முதலில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்ததாக தெரிவித்த துருவ் ஜுரேல் அப்போது தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெறுவது போன்ற நிலைக்கு வந்ததாக கூறினார்.

அதன் பின் தான் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற வேண்டும் என நினைத்த நிலையில், அதன் பின் இந்திய அணிக்கு சாதகமாக போட்டி மாறி, இந்திய அணி வெற்றியும் பெற்றது எனக் கூறி உள்ளார்.

துருவ் ஜுரேல் எந்த அணிக்கு ஆதரவளிக்கிறாரோ அந்த அணி தோல்வி அடைவது போல சென்றதால், தென்னாப்பிரிக்கா அணிக்கு ஆதரவு அளித்து அந்த அணியை தோற்கடித்து இருக்கிறார். இந்த வேடிக்கையான விஷயத்தை அவர் தற்போது பகிர்ந்து கொண்டார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp