சாம்பியன்ஸ் டிராபி புள்ளிப் பட்டியல் - பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த நியூசிலாந்து!
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் மோதிய நியூசிலாந்து அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து, குரூப் ஏ பிரிவின் புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி முதல் இடத்தையும், பாகிஸ்தான் அணி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளதுடன், அணியின் நெட் ரன் ரேட் பெரும் சரிவை சந்தித்து உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றுள்ளன.
முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 320 ரன்களும், பாகிஸ்தான் அணி 260 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து, 1.2 என்ற நெட் ரன் ரேட்டைப் பெற்றது.
நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடனும், +1.200 என்ற நெட் ரன் ரேட்டுடன் உள்ள நிலையில், இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எந்த போட்டியிலும் விளையாடாத நிலையில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
அடுத்து இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத இருக்கும் போட்டியின் முடிவை வைத்து இந்தப் புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்படவுள்ளதுடன், குரூப் பி பிரிவிலும் இதுவரை எந்த அணியும் போட்டிகளில் விளையாடவில்லை.
பிப்ரவரி 21 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் குரூப் பி பிரிவில் முதன்முதலாக மோத உள்ளதுடன், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 22ஆம் தேதி மோத உள்ளன.