பிசிசிஐயின் கோரிக்கையை புறக்கணித்த ஐசிசி: பாகிஸ்தானுக்கு செல்கிறது இந்தியா?
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் வரும் பெப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி கடைசியாக 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று ஆசிய கோப்பை தொடரில் விளையாடியதுடன், அதன் பிறகு அங்கு சென்றது இல்லை.
இந்த நிலையில் இந்த தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், வேறு ஏதேனும் நாட்டில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்திருந்தது.
இந்தக் கோரிக்கையால் ஐசிசி சங்கடத்துக்கு உள்ளானது. காரணம் என்னவென்றால், இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்கவில்லை என்றால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பெரும் நஷ்டத்தை சந்திக்கும்.
அத்துடன், இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை மற்றும் டுபாயில் நடத்தினால் பிசிசிஐ பேச்சை ஐசிசி கேட்கிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்.
இந்த நிலையில், கொழும்பில் நடைபெற்ற ஐசிசி யின் ஆலோசனைக் கூட்டத்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதற்கான 384 கோடி ரூபாய் வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பட்ஜெட்டை தாக்கல் செய்தது.
இதனை ஐசிசி நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதுடன், அதற்கான நிதி வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் ஹைபிரிட் முறை குறித்து ஐசிசி ஆலோசனை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்து எந்த ஒரு பேச்சும் இடம்பெறவில்லை.
பட்ஜெட்டை ஐசிசி ஒதுக்கி விட்டதால், இந்திய அணி கண்டிப்பாக பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா விளையாட வேண்டும். இல்லையெனில் இந்த தொடரில் இருந்து இந்தியா புறக்கணித்து விடும்.
அப்படி செய்தால் இந்தியாவுக்கு பதிலாக இலங்கை அல்லது வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் இந்த தொடரில் மாற்று அணியாக பங்கேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.