இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ஐ.சி.சி

இலங்கை கிரிக்கெட்டில்  அரசாங்கத்தின் தலையீடு  அதிகமாக இருப்பதாக நம்புவதால்  இவ்வாறு இலங்கை கிரிக்கெட் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ஐ.சி.சி

உடன் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் பேரவை, இலங்கை அணியை தனது உறுப்புரிமையில்  இருந்து நீக்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டில்  அரசாங்கத்தின் தலையீடு  அதிகமாக இருப்பதாக நம்புவதால்  இவ்வாறு இலங்கை கிரிக்கெட் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று கூடிய சர்வதேச கிரிக்கெட் பேரவை இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், சர்வதேச கிரிக்கெட் பேரவையின்  அங்கத்துவ நாடு எனற‌ ரீதியில் இலங்கை கிரிக்கெட் எதிர்க்கொண்டுள்ள நிலைமை மற்றும் அதன் கடமைகள், நிர்வாகம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போதே இலங்கை கிரிக்கெட்டை தற்காலிகமாக தடை செய்வது என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தற்காலிக தடையின் நிபந்தனைகள் என்ன என்பது தொடர்பில் உடனடியாக அறிய முடியவில்லை. நிபந்தனைகள் என்ன என்பது தொடர்பில்  விரைவில் அறிவிக்கப்ப‌டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை கூறியுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp