சமனில் முடிவடைந்த முதல் போட்டி.. அதிர்ந்து போன ரோஹித்.. சொதப்பிய இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பியதால் போட்டி சமனில் முடிவடைந்தது.

சமனில் முடிவடைந்த முதல் போட்டி.. அதிர்ந்து போன ரோஹித்.. சொதப்பிய இந்திய அணி!

இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பியதால் போட்டி சமனில் முடிவடைந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை  அணியின் துவக்க வீரர் பதும் நிசங்கா 75 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்தார். மற்ற டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை பறிகொடுத்தனர்.

இந்திய அணி முதல் பாதி பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்ட போதும், கடைசி நேரத்தில் சொதப்பியதுடன்,  6 விக்கெட்களை இழந்த இலங்கை அணி கடைசி பத்து ஓவர்களில் 65 ரன்கள் குவித்தது. 

இலங்கை அணி 200 ரன்களுக்குள் ஆட்டம் இழக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது.

அவிஷ்கா பெர்னாண்டோ 1 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்த நிலையில், சதிரா சமரவிக்ரமா 8 ரன்களிலும், சரித் அசலங்கா 14 ரன்களிலும், ஜனித் லியனாகே 20 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 

இலங்கை அணி 34.2 ஓவர்களில் 142 ரன்களுக்கு 6 விக்கெடுகளை இழந்திருந்த நிலையில், பின்வரிசை பேட்ஸ்மேன் டுனித் வெல்லாலகே 65 பந்துகளில் 67 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

வனிந்து அசரங்கா 24 ரன்கள், தனஞ்செயா 17 ரன்கள் எடுத்தனர். இதை அடுத்து இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு அபாரமான துவக்கம் அளித்த ரோஹித் சர்மா,  47 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். 

ஆனால், மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்காத நிலையில், இந்திய அணி 47.5 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்ததுடன், போட்டி சமனில் நிறைவடைந்தது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp