பிட்ச் தொடர்பில் வெளியான தகவல்.. அணித் தேர்வில் குழப்பம்.. பதற்றத்தில் ரோஹித்!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று துபாயில் மோத உள்ளன. 

பிட்ச் தொடர்பில் வெளியான தகவல்.. அணித் தேர்வில் குழப்பம்.. பதற்றத்தில் ரோஹித்!

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று துபாயில் மோத உள்ளன. 

இந்த நிலையில், போட்டி நடைபெறும் பிட்ச் தொடர்பில் வெளியான தகவல், இந்திய அணியில் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்வதில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி துபாய் மைதானத்தில் மூன்று போட்டிகளில் ஆடி உள்ளதுன், மூன்று போட்டிகளிலும் வெவ்வேறு பிட்சுகள் பயன்படுத்தப்பட்டன. 

இதன்போது, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பந்து ஸ்விங் ஆனதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எனினும், அது இந்திய அணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தி இருக்கவில்லை.

இந்தப் போட்டியில், இரண்டு அணிகளுமே அதிக அளவில் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியதுடன், அதற்கும் அந்த மைதானம் ஒத்துழைத்தது. 

சுழற் பந்துவீச்சாளர்கள் மெதுவாக பந்து வீசியபோது அது பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருந்தது. தற்போது அரையிறுதி போட்டிக்கான பிட்ச் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஒரு பிட்ச் ஆகவே இருக்கும் என கூறப்படுகிறது. 

அத்துடன், அதில் நிறைய விரிசல்கள் இருப்பதாகவும் மைதான ஊழியர்கள் கூறி உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர்கள் அந்த விரிசல்களின் மீது பந்து பிட்ச் ஆகும் வகையில் வீசினால் பந்து ஸ்விங் ஆக வாய்ப்பு உள்ளது. 

அதேபோல சுழற் பந்துவீச்சாளர்கள் அதை பயன்படுத்தினால் பந்து திரும்பவும் வாய்ப்பு உள்ள நிலையில் இந்திய அணியில் நான்கு ஸ்பின்னர்கள் மற்றும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் அல்லது மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள், இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களா என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கின்றது.

துபாயில் நடைபெற்ற குரூப் சுற்றில் இந்திய அணி ஆடிய மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடிய நிலையில், மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நான்கு சுழற்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றனர்.

இந்த நிலையில், இந்த இரண்டு திட்டத்தில் எதை செயல்படுத்துவது, பிட்ச் எந்த திட்டத்திற்கு ஒத்துழைக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன், இது கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் அணித் தேர்வு குறித்து பேசிய ரோஹித் சர்மா, உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. எனவே, இந்திய அணியில் கடைசி நிமிட மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

துபாய் மைதானத்தில் இந்திய அணி மட்டுமே ஆடுவதால் அந்த சூழ்நிலைகள் மற்றும் பிட்ச் பற்றி அதிக புரிதல் இருப்பதாக மற்றவர்களுக்கு தெரிந்தாலும், உண்மையில் சிக்கலான நிலையே உள்ளது. 

உலகக்கோப்பை போன்ற தொடர்களில் இந்திய அணிக்கு தலைவலியாக ஆஸ்திரேலிய அணி இருந்துள்ளது. 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையிலும் இதே போன்ற நிலைமை தான் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.