முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி... ஏற்பட்டுள்ள குழப்பம்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு?

இந்தியாவுடன் டி20 தொடரை இங்கிலாந்து அணி இழந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் வரும் வியாழக்கிழமை நாக்பூரில் ஆரம்பிக்க உள்ளது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி... ஏற்பட்டுள்ள குழப்பம்.. தமிழக வீரருக்கு வாய்ப்பு?

இந்தியாவுடன் டி20 தொடரை இங்கிலாந்து அணி இழந்த நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் வரும் வியாழக்கிழமை நாக்பூரில் ஆரம்பிக்க உள்ளது.

இந்திய அணியானது கடைசியாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2023 உலகக்கோப்பை அரை இறுதி ஆட்டத்தில் வெற்றிப்பெற்ற பின்னர், கடந்த 16 மாதங்களாக எந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை.

இதனால் இந்த மோசமான வரலாறை மாற்றும் நோக்கத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க உள்ளார்.

துணை கேப்டனான சுப்மன் கில் அவருடன் களமிறங்க உள்ளதுடன், மூன்றாவது வீரராக விராட் கோலி விளையாடலாம் என்றும் நான்காவது வீரராக ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகின்றது.

இந்த நிலையில், ஐந்தாவது வீரராக யாரை சேர்ப்பது என்பது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. உலகக்கோப்பை தொடரில் விக்கெட் கீப்பராக இருந்த கே எல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்குவதா அல்லது இடது கை பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு வழங்குவதா என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

ஒருவேளை இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு வழங்கினால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் கிடைக்காது. இந்த நிலையில் ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், ஏழாவது வீரராக ஜடேஜா அல்லது அக்சர் பட்டேல் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

எட்டாவது வீரராக வருண் சக்கரவர்த்திக்கும் ஒன்பதாவது வீரராக குல்தீப் யாதவ் அல்லது வாசிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்பதுடன், பத்தாவது வீரராக ஆர்ஸ்தீப் சிங்கிற்கும், 11 ஆவது வீரராக முகமது சமியும் விளையாடலாம்.

இதயும் படிங்க: ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட கே.எல்.ராகுல்.. 2 ஸ்டார் வீரர்களுக்கும் இடமில்லை!

அண்மையில் நடைபெற்ற ரஞ்சிப் போட்டியின் போது ஜடேஜா முதுகில் தசை பிடிப்பு ஏற்பட்ட நிலையில், அவர் குணமடையவில்லை என்றால் அக்சர் பட்டேலுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்

  1. ரோகித் சர்மா
  2. சுப்மன் கில்
  3. விராட் கோலி
  4. ஸ்ரேயாஸ் ஐயர்
  5. கேஎல் ராகுல்/ரிஷப் பண்ட்
  6. ஹர்திக் பாண்டியா
  7. ஜடேஜா/அக்சர் பட்டேல்
  8. வாசிங்டன் சுந்தர்/குல்தீப்
  9. வருண் சக்கரவர்த்தி
  10. முகமது ஷமி
  11. ஆர்ஸ்தீப் சிங்

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp