கண்ணீர் விட்டு கதறிய தென்னாப்பிரிக்க வீரர்கள்.. கட்டியணைத்த இந்திய கேப்டன்
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததை நம்ப முடியாமல் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கண் கலங்கினர்.
அண்டர் 19 உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டியில் வெற்றிக்கு அருகே வந்து தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. இந்திய அணி பெரும் சரிவில் இருந்து மீண்டு 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததை நம்ப முடியாமல் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கண் கலங்கினர்.
தென்னாப்பிரிக்க அண்டர் 19 அணி மீது எப்போதுமே நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல், இந்த முறை அண்டர் 19 உலகக்கோப்பை தொடரே தென்னாப்பிரிக்காவில் தான் நடைபெற்றது.
2வது டெஸ்டில் படுதோல்வி.. இந்தியாவை விட்டே புறப்பட்டுச் சென்ற இங்கிலாந்து அணி.. அதிரடி முடிவு!
அதனால், நம் சொந்த மண்ணில் உலகக்கோப்பை வென்று காண்பிக்க வேண்டும் என்ற பெரிய கனவுடன் அரை இறுதி வரை முன்னேறியது தென்னாப்பிரிக்கா.
இந்தியாவுக்கு ஏற்றயான எதிரான அரை இறுதியில் முதலில் பேட்டிங் செய்து 244 ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்க அணி, பின்னர் பந்துவீச்சில் இந்திய அணியை 32 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற அளவிற்கு சரிவில் தள்ளியது.
ஆனால், இந்திய அணி கேப்டன் உதய் சகாரன் மற்றும் சச்சின் தாஸ் கூட்டணி அமைத்து 171 ரன்கள் சேர்த்தனர். அதனால் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அரை இறுதி தோல்வியை ஏற்க முடியாமல் தென்னாப்பிரிக்க அணி கேப்டனும் கண் கலங்கினார். இந்த நிலையில், இந்திய அணி கேப்டன் உதய் சாகரன் அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார்.