இந்தியா, ஜிம்பாப்வே டி20 தொடர் எப்போது துவங்கும்? எதில் பார்க்க முடியும்? விபரம் இதோ!
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இப்போட்டிகள் ஜூன் 6, 7, 10, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இப்போட்டிகள் ஜூன் 6, 7, 10, 13, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
5 டி20 போட்டிகளும், இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு துவங்கும். ஜிம்பாப்வே நேரப்படி, இப்போட்டிகள் மதியத்திற்கு முன் 10:30 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஜிம்பாப்வே இடையிலான டி20 தொடரை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் ஒளிபரப்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் சோனி லைவ் ஆப் ஊடாக இலவசமாக பார்க்கலாம்.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஷுப்மன் கில் இடம்பெற்றுள்ள நிலையில், ஹர்ஷித் ராணா, ரியான் பராக், அபிஷேக் சர்மா, சாய் சுதர்ஷன் போன்றவர்கள் இத்தொடரில் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய டி20 அணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர்கள் இடத்தை பிடிக்க ஜிம்பாப்வே தொடரில் இருந்த பலத்த போட்டி இருக்கும் என்பதால், இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணி:
ஷுப்மன் கில் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், துரூவ் ஜோரல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷர் தேஜ்பண்டே, சாய் சுதர்ஷன், ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா.