ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர் அடிக்கப்பட்ட போட்டி... அதிரடி சாதனை.. 

ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் 33 சிக்ஸ் அடிக்கப்பட்டதே இதுவரை அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட சாதனையாக இருந்தது.

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர் அடிக்கப்பட்ட போட்டி... அதிரடி சாதனை.. 

ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் 33 சிக்ஸ் அடிக்கப்பட்டதே இதுவரை அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட சாதனையாக இருந்தது.

அந்த சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முறியடித்தது. 

சன்ரைசர்ஸ் அணி 18 சிக்ஸ் அடித்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 சிக்ஸ் அடித்தது. இந்தப் போட்டியில் மொத்தம் 38 சிக்ஸ் அடிக்கப்பட்டது.

2018இல் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியிலும், 2021இல் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டியிலும் 33 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன.

அத்துடன், ஒட்டுமொத்த டி20 போட்டி வரலாற்றில் ஒரே போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கை இதுவாகும் என்பதுடன், இந்தப் போட்டியில் 523 ரன்கள் குவிக்கப்பட்டதும் ஐபிஎல் வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஆகும். 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 277 ரன்கள் குவித்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 246 ரன்கள் குவித்தது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp