அரைசதம் விளாசிய ரச்சின் - ருதுராஜ்... மும்பையை வீழ்த்தியது சென்னை அணி! தரவரிசை பட்டியல் இதோ!

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணியால், சென்னை அணியின்பந்து வீச்சை தாக்குபிடித்து ரன்கள் குவிக்க திணறியது. 

அரைசதம் விளாசிய ரச்சின் - ருதுராஜ்... மும்பையை வீழ்த்தியது சென்னை அணி! தரவரிசை பட்டியல் இதோ!

நடப்பு ஜபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணியால், சென்னை அணியின்பந்து வீச்சை தாக்குபிடித்து ரன்கள் குவிக்க திணறியது. 

ரோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழக்க, சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 29 ரன்களும், திலக் வர்மா 25 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். 

சென்னை அணியின் கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ரோஹித் சர்மா, ரிக்கெல்டன், டிரெண்ட் போல்ட் ஆகியோவின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சுழற் பந்துவீச்சாளர் நூர் அஹமது 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து வில் ஜாக்ஸ், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா மற்றும் நமன் திர் ஆகியோரின் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனைடுத்து, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு தொடக்கம் மோசமாக இருந்தது.

ஆரம்ப பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதி 2 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில், ரச்சின் - ருதுராஜ் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டதுடன், இருவரும் 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

26 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரிகள் அடித்த நிலையில், ருதுராஜ் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க சிவம் துபே 9 ரன்னும், தீபக் ஹூடா 3 ரன்னும், சாம் கரண் 4 ரன்களும் எடுத்து வெளியேறினார்.

இருந்தாலும், ரச்சின் ரவீந்திரா பொறுப்புடன் விளையாடியதுடன், அவரும் ரவீந்திர ஜடேஜாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

இதயும் படிங்க:  43 வயதில்  தோனி செய்த ஸ்டம்பிங்... மிரண்டு போன சூர்யகுமார் யாதவ்.. நடந்தது என்ன!

இதானால், 19.1 ஓவரில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரச்சின் ரவிந்திரா 45 பந்துகளை எதிர்கொண்டு 4 சிக்சர் இரண்டு பவுண்டரியுடன் 65 ரன்கள் களத்தில் இருந்தார். மும்பை அணி தரப்பில் விக்னேஷ் புத்தூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

நடப்பு ஜபிஎல் தொடரில் இதுவரை 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் தரவரிசை பட்டியலில் ஹைதராபாத் அணி முதல் இடத்திலும், பெங்களூரு அணி இரண்டாம் இடத்திலும், சென்னை அணி மூன்றாம் இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.