2025 ஐபிஎல் அட்டவணை அறிவிப்பு: எந்தெந்த தேதிகளில் 74 போட்டிகள்? முழு விவரம் இதோ!
ஐபிஎல் 2025 அட்டவணையை பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததுடன், தொடக்க ஆட்டம் மார்ச் 22 ஆம் தேதி ஈடன் கார்டன்ஸில் நடைபெறுகின்றது.

ஐபிஎல் 2025 அட்டவணையை பிசிசிஐ ஞாயிற்றுக்கிழமை அறிவித்ததுடன், தொடக்க ஆட்டம் மார்ச் 22 ஆம் தேதி ஈடன் கார்டன்ஸில் நடைபெறுகின்றது.
இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
பிளே ஆஃப் போட்டிகள் மே 20 முதல் மே 25 வரை நடைபெறுவதுடன், மே 20 மற்றும் 21 தேதிகளில் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் குவாலிஃபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் நடைபெறும்.
அத்துடன், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி என்பன நடைபெறும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மார்ச் 23 அன்று ஹைதராபாத்தில் விளையாடுவதுடன், மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் அன்று மோதுகின்றன.
ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடுவதுடன், மொத்தம் 70 போட்டிகள் நடைபெறும் என்பதுடன், 13 மைதானங்களில் 74 போட்டிகள் 65 நாட்களில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.