விராட் கோலியை தக்கவைத்த ஆர்சிபி.. எத்தனை கோடி தெரியுமா? கொட்டிக்கொடுத்த அணி நிர்வாகம்!

மெகா ஏலத்திற்கு பின்னரே இது தொடர்பாக ஆர்சிபி அணி மற்றும் விராட் கோலி இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்படுகின்றது.

விராட் கோலியை தக்கவைத்த ஆர்சிபி.. எத்தனை கோடி தெரியுமா? கொட்டிக்கொடுத்த அணி நிர்வாகம்!

ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், ஆர்சிபி அணி தரப்பில் நட்சத்திர வீரர் விராட் கோலி ரூ.21 கோடிக்கும், இளம் வீரர் ரஜத் பட்டிதர் ரூ.11 கோடிக்கும், அன்-கேப்ட் வீரரான யாஷ் தயாள் ரூ.5 கோடிக்கும் ரீடெய்ன் வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நட்சத்திர வீரர்களான டூ பிளசிஸ், கிளென் மேக்ஸ்வெல், வில் ஜாக்ஸ், முகமது சிராஜ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மெகா ஏலத்தின் போது ஆர்சிபி அணியால் 3 வீரர்களுக்கு ஆர்டிஎம் கார்டினை பயன்படுத்த முடியும். இந்த 3 வீரர்களை தக்கவைத்ததன் காரணமாக ஆர்சிபி அணியின் பர்ஸ் தொகையில் 37 கோடி ரூபாய் கழிக்கப்பட்டுள்ளது.

120 கோடி ரூபாயில் 37 கோடி ரூபாய் கழிக்கப்பட்டால், மீதமுள்ள 83 கோடி ரூபாயுடன் ஆர்சிபி அணியால் மெகா ஏலத்தை சந்திக்க முடியும். பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் உரிமையாளர்கள் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அத்துடன், விராட் கோலிக்கு பின்னர் மற்றொரு இந்திய பேட்ஸ்மேன் இருவரை ஆர்சிபி அணி நிர்வாகம் வளர்க்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாகவே ரஜத் பட்டிதருக்கு ரூ.11 கோடி ஒப்பந்தம் அளிக்க முன் வந்துள்ளது. 

மேலும் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி அடுத்த சீசனில் விளையாடுவார் என்று கூறப்பட்ட நிலையில், அணி நிர்வாகம் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

மெகா ஏலத்திற்கு பின்னரே இது தொடர்பாக ஆர்சிபி அணி மற்றும் விராட் கோலி இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp