ஐபிஎல் புள்ளிப்பட்டியல்: ஆர்சிபிக்கு அதிஷ்டம்.. முதல் இடம் பிடிக்குமா சிஎஸ்கே?
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது இடத்தில் உள்ளதுடன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் நேற்று நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றியைப் பெற்றது.
இதன் காரணமாக, நெட் ரன் ரேட் மிக மோசமான சரிவை சந்தித்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் இடத்தை இழந்து தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது.
அந்த அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டும் பெற்று இரண்டு புள்ளிகளுடன் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நெட் ரன் ரேட் -0.128 ஆக உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஒரு போட்டியில் மட்டும் விளையாடி ஒரு வெற்றியைப் பெற்று 2.137 என்ற நெட் ரன் ரேட்டுடன் முதல் இடத்தில் உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியைப் பெற்று இரண்டு புள்ளிகளுடன் 0.963 என்ற நெட் ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய மூன்று அணிகளும் இரண்டு புள்ளிகளைப் பெற்று நெட் ரன் ரேட்டில் சிறிய வித்தியாசத்துடன் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று வெள்ளிக்கிழமை மோதவுள்ள நிலையில், இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தினால், அதிக நெட் ரன் ரேட்டைப் பெற்று நான்கு புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.