தோனியாலதானன் தோத்தோம்... இல்லன்னா நாங்க ஜெயிச்சிருப்போம் - ஹர்திக் பாண்டியா அதிரடி

மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 

தோனியாலதானன் தோத்தோம்... இல்லன்னா நாங்க ஜெயிச்சிருப்போம் - ஹர்திக் பாண்டியா அதிரடி

மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக 20 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 

தோல்விக்கு பின்னால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தோனி குறித்து புகழ்ந்து பேசினார்.

மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் டாஸ் வென்று சிஎஸ்கே அணியை பேட்டிங் செய்ய வைத்தது. அந்த அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா மற்றும் இசான் கிஷான் 70 ரன் பார்ட்னர்ஷிப் தந்தார்கள். ஆனாலும் கூட மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

சிஎஸ்கே அணியின் வேகப் பந்துவீச்சாளர் பதிரன மும்பை இந்தியன்ஸ் அணியின் இசான் கிஷான், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ரோமாரியோ செப்பர்ட் என முக்கிய விக்கெட்டுகளை சரியான நேரத்தில் வீழ்த்தி சிஎஸ்கே அணிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

தோல்விக்கு பின் பேசிய ஹர்திக் பாண்டியா, “இது நாங்கள் எட்டக்கூடிய இலக்குதான். அவர்கள் நன்றாக பந்து வீசினார்கள். இந்த போட்டியில் பதிரனதான் வித்தியாசமாக இருந்தார். 

மேலும் அவர்கள் திட்டங்களில் தெளிவாக இருந்தார்கள், ஸ்டெம்புகளுக்கு பின்னால் இருந்து தோனி சிறந்த யோசனைகளை வழங்கினார். இது அவர்களுக்கு பெரிய அளவில் உதவி செய்தது. 

நாங்கள் பதிரன முதல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றும் வரை ஆட்டத்தின் மிகவும் முன்னணியில் இருந்தோம். நாங்கள் அந்த இடத்திலிருந்து யோசித்து சிறப்பான வேறு ஏதாவது செய்திருக்க வேண்டும். 

சிவம் துபேவுக்கு சுழல் பந்துவீச்சாளர்களை விட வேகப்பந்துவீச்சாளர்கள் கடினமாக இருப்பார்கள் என்று நான் நினைத்தேன். அடுத்த நான்கு போட்டிகளுக்கு நாங்கள் நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்” என்று கூறி உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp