இதை செய்தால் வெற்றி நிச்சயம்.... இந்த மாதிரி சிறந்த வாய்ப்பு கிடைக்காது - கவாஸ்கர் அதிரடி!
இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை.
இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி அங்கு டெஸ்ட் தொடரை வெற்றிப்பெற்று இருந்தாலும், தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை.
இலங்கை கூட தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தாலும், இந்தியாவுக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வரும் டிசம்பர் 26 ஆம் தேதி இந்திய அணி தென்னாபிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெறுமா என்பது குறித்து பேசியுள்ள கவாஸ்கர், தென்னாப்பிரிக்காவை வீழ்த்துவதற்கு இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தென்னாப்பிரிக்காவில் இரண்டு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லை என்பதால் இதன் மூலம் இந்திய வீரர்கள் சரியாக விளையாடினால் நிச்சயமாக முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு மேல் அடிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இளம் வீரர்களை வைத்து... டிராவிட் போட்ட ஒரே ஒரு திட்டம்... தென்னாப்பிரிக்கா கதையை முடித்த இந்தியா!
அத்துடன், பந்து புதிதாக இருக்கும் போது கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றும் ஆடுகளத்தில் பவுன்சும் நன்றாக இருக்கும் என்பதால், இதையெல்லாம் சமாளித்து ஆடுவது தான் டெஸ்ட் கிரிக்கெட் என்றும், ஐந்து நாட்கள் இருப்பதால் இதனை பயன்படுத்தி நன்றாக பேட்டிங் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 300லிருந்து 500 ரன்கள் இந்திய அணி எடுத்தாலே பவுலர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்படும் என்றும் இதன் மூலம் தென்னாப்பிரிக்காவில் இரண்டு இன்னிங்ஸையும் எளிதாக சுருட்டி விடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு தொடரை இந்தியா வென்று இருக்க வேண்டும் என்றும் இதைப் போன்று 2021 ஆம் ஆண்டு இந்திய அணியில் வீரர்கள் இருந்தாலும் அது அவ்வளவு சிறந்த அணியாக இல்லை என்று கவாஸ்கர் கூறியிருக்கிறார்.