ஆஸ்திரேலியா மண்ணில் சம்பவம் செய்த சாய் சுதர்சன்! இந்திய ஏ அணி  கம்பேக்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா ஏ அணி அங்கு சென்றுள்ளது.

ஆஸ்திரேலியா மண்ணில் சம்பவம் செய்த சாய் சுதர்சன்! இந்திய ஏ அணி  கம்பேக்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணி அபார ஆட்டத்தால் மாஸ் காட்டியுள்ளது.

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா ஏ அணி அங்கு சென்றுள்ளது.

நேற்று முன்தினம் தொடங்கிய முதல் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற 2வது நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி வீரர்கள் சிறப்பாக பவுலிங் செய்தனர். 

முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்துவீச அடுத்தடுத்து ஆஸ்திரேலியா ஏ அணி வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில், அந்த அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

முகேஷ் குமார் 6 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து, 88 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 

இந்த இன்னிங்ஸில் ருதுராஜ் கெய்க்வாட் 5 ரன்களிலும், அபிமன்யூ ஈஸ்வரன் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா ஏ அணி 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது களம் புகுந்த சாய் சுதர்சன் 93 பந்துகளில் அரைசதத்தை எட்ட, மறுமுனையில் தேவ்தத் படிக்கலும் அரைசதம் விளாசினார். இதன்பின் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியின் கைகள் ஓங்கியது. 

சிறப்பாக ஆடிய சாய் சுதர்சன் 96 ரன்களிலும், தேவ்தத் படிக்கல் 80 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஏ அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளது. 

அதேபோல் 120 ரன்கள் முன்னிலையை பெற்றுள்ள நிலையில், 3வது நாள் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியின் 2 வீரர்களும் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp