இந்திய அணியின் பயிற்சி ரத்து... நேரடியாக களமிறங்க ரோகித் முடிவு... நடந்தது என்ன?

பார்படாஸ் மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால், போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்திய அணியின் பயிற்சி ரத்து... நேரடியாக களமிறங்க ரோகித் முடிவு... நடந்தது என்ன?

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று இரவு நடக்கவுள்ள நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்காஅணிகள் தயாராகி வருகின்றன.

எனினும், பார்படாஸ் மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால், போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஐசிசி தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல் நாள் மாலை நேர பயிற்சியை இந்திய அணி ரத்து செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இறுதிப்போட்டிக்கு முன் இந்திய அணி பயிற்சிய் ரத்து செய்ததற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் 2 மணி நேரம் தாமதமாக முடிவடைந்ததால், கயானாவில் இருந்து விமானம் மூலம் பார்படாஸ் வருவதற்கு நள்ளிரவாகியது.

இறுதிப்போட்டிக்கு ஒருநாள் மட்டும் இடைவெளி இருப்பதால், இந்திய அணி வீரர்கள் பயிற்சியை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இருப்பினும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் ஹோட்டலில் இருந்தவாறு இறுதிப்போட்டிக்கான யுக்திகள் மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp