5 வீரர்கள் டக் அவுட்.. இந்திய அணியின் மோசமான சாதனை.. என்ன செய்ய போகிறார் கம்பீர்!
அந்தப் போட்டியில் புஜாரா, ரஹானே மற்றும் அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் டக் அவுட்டாகியதுடன், ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 5 வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளனர். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டாப் 8 வீரர்களில் 5 வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறி இருப்பது இதுவே முதல்முறையாகும்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி மோசமான சாதனையை படைத்தது.
அந்தப் போட்டியில் புஜாரா, ரஹானே மற்றும் அஸ்வின் ஆகிய 3 வீரர்கள் டக் அவுட்டாகியதுடன், ஏனைய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆனால், அது ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டி என்பதால் விமர்சனங்கள் பெரிதாக இல்லை. ஆனால் தனது சொந்த மண்ணிலேயே இந்திய அணியின் மோசமான பேட்டிங் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 1987ஆம் ஆண்டு டெல்லி மைதானத்தில் இந்திய அணி 75 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியதுடன், 2008ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 76 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
இந்த நிலையில், தற்போது பெங்களூர் மைதானத்தில் நடந்து வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இந்திய அணி 46 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
இந்திய அணியின் விராட் கோலி, சர்ஃபராஸ் கான், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகிய 5 வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கின்றனர்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் டாப் 8 வீரர்களில் 5 வீரர்கள் டக் அவுட்டாகி இருப்பது இதுவே முதல்முறை என்பதுடன், ரிஷப் பண்ட் 20 ரன்களும், ஜெய்ஸ்வால் 13 ரன்களும் எடுத்துள்ளனர். ஏனைய வீரர்களின் வெறும் 5 ரன்களை கூட எட்டவில்லை.
இதனால் இந்திய கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இது மோசமான சாதனையாக அமைந்துள்ளதுடன், ரோஹித் சர்மாவின் டாஸ் முடிவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.