விராட் கோலியை தூக்குங்க.. ஜெய் ஷாவின் உத்தரவுக்கு ரோஹித் சர்மா மறுப்பு?
இந்த தகவலை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்திய டி20 அணியில் விராட் கோலியை சேர்க்க வேண்டாம் என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரிடம் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன், அஜித் அகர்கர் தன் சக தேர்வுக் குழு உறுப்பினர்களை இதற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என ஜெய் ஷா கூறி இருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்த தகவலை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியை சேர்க்கப் போவதில்லை என செய்தி பரவிய நிலையில் இந்த சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
டி20 போட்டிகளில் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவிப்பதில்லை என்ற விமர்சனத்தை வைத்தே விராட் கோலியை 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு செய்யக் கூடாது என தேர்வுக் குழு முடிவு செய்ததாக தகவல் பரவியுள்ளது.
எனினும், ஜெய் ஷாவின் கருத்தை தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் ஏற்றுக் கொள்ளவில்லை எற்றும் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் ஜெய் ஷா பேசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
என்ன நடந்தாலும் சரி விராட் கோலி டி20 அணியில் இடம் பெற வேண்டும் என ரோஹித் சர்மா கூறியதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்த தகவலின் உண்மைத்தன்மை தெரியாத நிலையில், விராட் கோலி டி20 அணியில் நிச்சயம் இடம் பெறுவார் என்றே பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான உத்தேச அணி மே மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அப்போது இந்த சர்ச்சைக்கு பதில் தெரிய வரும்.