ஆடுகள விவகாரத்தில் இந்தியா மீது வீண் பழி.. உண்மை என்ன? வெளியான ஆதாரம்!
ஆனால் இந்தியா கடைசி நேரத்தில் ஆடுகளத்தை மாற்றி விட்டதாக இதனை பொய்யாக திரித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் இந்தியா ஆடுகளத்தில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்து உள்ளதாக செய்தி வெளியானது.
எனினும், ஆடுகளத்தை தயாரிப்பது பராமரிப்பது அனைத்தும் ஐசிசி யின் மேற்பார்வையில் தான் நடக்கும். அப்படி நடக்கும் பட்சத்தில் கடைசி நேரத்தில் ஆடுகளத்தை மாற்றும் முயற்சி எல்லாம் செய்வதற்கு வாய்ப்பே கிடையாது.
ஆனால் நடந்தது என்னவென்றால் ஆடுகளத்தில் புற்கள் அதிகம் அளவு இருந்தது. அந்த புற்களை எப்போதுமே போட்டியின் முதல் நாள் முன்பு தான் ஆடுகள பராமரிப்பாளர்கள் வெட்டுவார்கள். இதுதான் நேற்றும் நடந்துள்ளது.
ஆனால் இந்தியா கடைசி நேரத்தில் ஆடுகளத்தை மாற்றி விட்டதாக இதனை பொய்யாக திரித்து வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தும், இரண்டாவது பேட்டிங் செய்தும், சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும் விளையாடி தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் வென்றிருக்கிறது.
இதனால் அரை இறுதியில் இப்படி ஆடுகளத்தை மாற்றி தான் ஜெயிக்க வேண்டும் என்ற கட்டாயம் இந்தியாவுக்கு கிடையாது. இப்படி இருக்கும் பட்சத்தில் இந்தியா மீது பொறாமையில் இருக்கும் சிலரே இவ்வாறான பொய் செய்திகளை பரப்பி வருகிறார்கள்.
ஐசிசி விதிப்படி புதிய ஆடுகளத்தில் தான் அரையிறுதி போட்டி நடைபெற வேண்டும் என்ற எந்த விதியும் கிடையாது. ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளத்தில் போட்டி நடத்தலாம்.
ஐசிசி விதிப்படி ஆடுகளமும் பௌண்டரி பகுதிகளும் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். இது மட்டும்தான் விதி.தற்போது இது படி தான் இன்று அரை இறுதி போட்டி நடைபெறுகிறது. அது தவிர வேறு எந்த ஒரு ஏமாற்று வேலையும் இந்தியா செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.