இந்தியா - பாகிஸ்தான் போட்டி... இரண்டு வீரர்களை அதிரடியாக நீக்கிய ரோஹித்.. இதுதான் காரணமா?
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 23ஆம் தேதி மோத உள்ளதுடன், இந்திய அணியின் பிளேயிங் லெவன் பற்றி பார்க்கலாம்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 23ஆம் தேதி மோத உள்ளதுடன், இந்திய அணியின் பிளேயிங் லெவன் பற்றி பார்க்கலாம்.
இந்த முறையும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒன்று, இரண்டு பந்துவீச்சாளர்களைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. தற்போது துபாய் மைதானத்தில் தான் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் ஆட உள்ளது.
இந்த நிலையில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பிளேயிங் லெவனில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.
அத்துடன், வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணாவை நீக்கிவிட்டு அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணம் வலது கை மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்க வேண்டும் என்பதுதானாம்.
முகமது ஷமி வலது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் நிலையில், அவருடன் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் இருந்தால் பாகிஸ்தான் அணியைக் கட்டுப்படுத்தலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில் அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது.
ஹர்ஷித் ராணா விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் கடைசி ஓவர்களில் அவரை பௌலிங் செய்ய வைப்பது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஹர்திக் பாண்டியாவிற்கு அதிக ஓவர்களைக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது.
பேட்டிங் வரிசையைப் பொறுத்தவரை, ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதல் எட்டு இடங்களில் பேட்டிங் செய்வார்கள்.
அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் செயல்படுவார்கள். இவர்களைத் தவிர்த்து முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய மூன்று பந்துவீச்சாளர்கள் இடம் பெறுவார்கள்.
உத்தேச பிளேயிங் லெவன்
ரோஹித் சர்மா (கேப்டன்)
சுப்மன் கில்
விராட் கோலி
ஸ்ரேயாஸ் ஐயர்
கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்)
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
அக்சர் பட்டேல்
முகமது ஷமி
அர்ஷ்தீப் சிங்
வருண் சக்கரவர்த்தி