சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி: ஒரு இடத்திற்கு கம்பீர், அகார்கர் இடையே இழுபறி!
தேர்வுக்கு தலைவர் அஜித் அகார்கர், ரிஷப் பந்தை தேர்வு செய்தாக வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறாராம். இதனால்தான், இந்திய அணியை இன்னமும் சமர்பிக்க முடியவில்லை.
சாம்பியன்ஸ் டிராபி தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்க உள்ளதுடன், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணிகளை சமர்பிக்க பிப்ரவரி 12ஆம் தேதியை கடைசி தேதியாக ஐசிசி அறிவித்த நிலையில், மற்ற 6 அணிகளும், வீரர்கள் பட்டியலை வழங்கிவிட்டன. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் வீரர்கள் பட்டியலை சமர்ப்பிக்கவில்லை.
இந்திய அணி அறிவித்த பிறகுதான், தமது அணி வீரர்களை அறிவிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ள நிலையில், இந்திய அணி வரும் 18ஆம் தேதிதான், வீரர்கள் பட்டியலை ஐசிசியிடம் ஒப்படைக்க உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணியில், 14 வீரர்களை தேர்வு செய்துவிட்டதுடன் விக்கெட் கீப்பர் இடத்துக்கு போட்டி நிலவி வருகிறது. விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை சேர்க்க வேண்டும் என கௌதம் கம்பீர் கோரிக்கை வைத்து வருகிறார்.
அதேநேரத்தில், தேர்வுக்கு தலைவர் அஜித் அகார்கர், ரிஷப் பந்தை தேர்வு செய்தாக வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறாராம். இதனால்தான், இந்திய அணியை இன்னமும் சமர்பிக்க முடியவில்லை.
இந்திய அணி ஓபனர்கள் இடத்திற்கு ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோரை தேர்வு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதுடன், மிடில் வரிசை இடங்களில் விராட் கோலி, ஷுரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், சாம்சன் அல்லது ரிஷப் பந்த் ஆகியோர் இடம்பெறுவார்கள்.
ஆல்-ரவுண்டர்கள் இடங்களில் ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், நிதிஷ் ரெட்டி ஆகியோர் இருப்பதுடன், பந்துவீச்சாளர்கள் இடங்களுக்கு குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பரீத் பும்ரா, யுஜ்வேந்திர சஹல் ஆகியோர் இருப்பார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய உத்தேச அணி
ரோஹித் சர்மா (கேப்டன்)
விராட் கோலி
ஷ்ரேயஸ் ஐயர்
ஷுப்மன் கில்
யாஷஸ்வி ஜெய்ஷ்வால்
கே.எல்.ராகுல்
ரிஷப் பந்த் / சஞ்சு சாம்சன்
ஹர்திக் பண்டியா
அக்சர் படேல்
நிதிஷ் ரெட்டி
குல்தீப் யாதவ்
முகமது ஷமி
ஜஸ்பரீத் பும்ரா
முகமது சிராஜ்
யுஜ்வேந்திர சஹல்