பாகிஸ்தான் அணியை வீழ்த்தி மாபெரும் வரலாற்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி!
மகளிர் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.
மகளிர் கிரிக்கெட்டில் முதன்முறையாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் இரண்டாவது போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றதுடன், இதுவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு முதல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியாகும்.
பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி அபாரமாக பந்து வீசியதை அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் நிலை தடுமாறியது.
19.2 ஓவர்களில் எல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்து 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான். அந்த அணியில் சிட்ரா அமீன் 25 ரன்கள், துபா ஹாசன் 22 ரன்கள், ஃபாத்திமா சனா 22 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சில் தீப்தி சர்மா மூன்று விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். ரேணுகா சிங் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை வீழ்த்தி அசர வைத்தார். பூஜா வஸ்திராகர் இரண்டு விக்கெட்களும், ஸ்ரேயங்கா பாட்டில் இரண்டு விக்கெட்களும் வீழ்த்தினர்.
109 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா அதிரடி துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தனர். ஷபாலி வர்மா 29 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
ஸ்மிருதி மந்தனா 31 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்து சென்றார். மூன்று விக்கெட்கள் வீழ்ந்த போதும் இந்திய அணி 14.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
ஹேமலதா 14 ரன்களில் ஆட்டம் இழந்தார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரீகஸ் கடைசி வரை நின்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. அதன் மூலம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது.