3ஆவது ஒருநாள் போட்டி... சம்பவம் செய்த இந்திய அணி... அபார வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்கள் எடுத்தது.
சுப்மன் கில் 14 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 78 பந்துகளில் 112 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 52 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களும், கே எல் ராகுல் 40 ரன்களும் சேர்த்தனர்.
இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அதில் ரஷித் 10 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஃபில் சால்ட் 23 ரன்கள், பென் டக்கெட் 34 ரன்கள் எடுக்க டாம் பான்டன் 38, ஜோ ரூட் 24, ஹாரி புரூக் 19, கஸ் அட்கின்சன் 38 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து இங்கிலாந்து அணி 34.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 214 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர். சுப்மன் கில்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.