ஓய்வை அறிவிப்பது நல்லது: முகமது ஷமி தொடர்பில் வெளிப்படையாக பேசிய ரோஹித் சர்மா!

முகமது ஷமி எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா பதில் அளித்தார்.

ஓய்வை அறிவிப்பது நல்லது: முகமது ஷமி தொடர்பில் வெளிப்படையாக பேசிய ரோஹித் சர்மா!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணிக் கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார். அப்போது, முகமது ஷமி எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா பதில் அளித்தார்.

அப்போது,‘‘ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் முகமது ஷமியை சேர்க்க முடியாது. அவரது முழங்காலில் ஏற்பட்ட காயம், மீண்டும் பிரச்சினை ஏற்படுத்தி உள்ளது. 

அவரது முழங்கால் மீண்டும் வீங்கி இருக்கிறது. இது அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் அவர் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

அத்துடன், ‘‘முகமது ஷமி தற்போது, பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஷமியை நாங்கள் மேலும் சிரமப்படுத்த விரும்பவில்லை. அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

ஒருநாள் உலகக் கோப்பை முடிந்தப் பிறகு, முகமது ஷமிக்கு காலில் அறுவை சிசிக்கை செய்யப்பட்டது. அதன்பிறகு, ஷமி முழு பிட்னஸை எட்டி, பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகடமியில் பந்துவீசி பயிற்சி மேற்கொள்ள ஆரம்பித்தார். 

இந்நிலையில், ஷமிக்கு மீண்டும் அதே இடத்தில் வலி ஏற்பட்டதாகவும், பிறகு வீங்க ஆரம்பித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. வீக்கம் குறைந்தப் பிறகு, ரெஸ்ட் எடுத்துவிட்டு, அவர் முழு பார்மில் பந்துவீச்சை ஆரம்பிக்க சில காலம் ஆகும் எனவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில், ஷமி ஓய்வு அறிவித்துவிட்டு, ஐபிஎலில் மட்டும் விளையாடுவதுதான் சிறந்ததாக இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது 34 வயதாகும் முகமது ஷமி, 64 டெஸ்ட் போட்டிகளில் 229 விக்கெட்களையும், 101 ஒருநாள் போட்டிகளில் 195 விக்கெட்களையும், 23 டி20 போட்டிகளில் 24 விக்கெட்களையும் வீழ்த்தியிருக்கிறார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp