இதுவரை எந்த அணியும் செய்யாத ரெக்கார்டு.. இந்திய அணி படைத்த இமாலய சாதனை!

147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத இமாலய சிக்ஸ் சாதனை ஒன்றை, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்துள்ளது. 

இதுவரை எந்த அணியும் செய்யாத ரெக்கார்டு.. இந்திய அணி படைத்த இமாலய சாதனை!

147 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் செய்யாத இமாலய சிக்ஸ் சாதனை ஒன்றை, நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்துள்ளது. 

நடப்பு வருடத்தில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அதிரடி காட்டி வருவதுடன், அதிக சிக்ஸர்களை விளாசி உள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஐந்து சிக்ஸ் அடித்து உள்ளதுடன்,  2024 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளின் 102 சிக்ஸ் அடித்து சாதனை படைத்து இருக்கிறது. 

அத்துடன், ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸ் அடித்த முதல் அணி என்ற சாதனையை இந்திய அணி செய்துள்ளதுடன், முன்னதாக எந்த அணியும் ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்ஸ் அடித்ததில்லை.

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 89 சிக்ஸ் அடித்து இருந்ததுடன், 2021 ஆம் ஆண்டு இந்திய அணி 87 சிக்ஸ் அடித்து இருந்தது. 

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி அந்த சாதனையை முறியடித்த நிலையில், இங்கிலாந்து அணியின் சாதனையை நியூசிலாந்து தொடருக்கு முன் 97 சிக்ஸ் அடித்து இந்திய அணி மீண்டும் முறியடித்தது.

இந்த நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் ஐந்து சிக்ஸ் அடித்ததன் மூலம், 102 சிக்ஸ் அடித்து இருக்கிறது இந்திய அணி. 

விராட் கோலி செய்த மொகா சாதனை... ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்தார்! 

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் 46 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி ஆல் அவுட் ஆனது.

எனினும், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக ஆடி வருவதுடன், 49 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்து இருக்கிறது. 

ரோஹித் சர்மா 52 ரன்களும், ஜெய் ஸ்வால் 35 ரன்களும், விராட் கோலி 70 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்த நிலையில், சர்ஃபராஸ் கான் 78 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 125 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...