ஹர்திக் பாண்டியாவால் பதறிய கில்.. விக்கெட் இழப்பு.. சூடான ரோஹித்.. நடந்தது என்ன?
களமிறங்கிய அப்போது சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அரை சதம் அடித்து அணியை மீட்டனர். ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடிக்கலாம் என காத்திருந்த சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா அடித்த சிக்சரால் பதறிப் போனதுடன், பதற்றத்தில் இருந்த கில், பந்தை தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதை பார்த்து கேப்டன் ரோஹித் சர்மா கொதித்து போனார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்கள் எடுத்த நிலையில், அடுத்து ஆடிய இந்திய அணி 19 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த நிலையில், ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இதனையடுத்து, களமிறங்கிய அப்போது சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அரை சதம் அடித்து அணியை மீட்டனர். ஸ்ரேயாஸ் ஐயர் 59 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த அக்சர் பட்டேல் 52 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். சுப்மன் கில் 83 ரன்கள் எடுத்திருந்தபோது இந்திய அணி ஐந்தாவது விக்கெட் ஆக ராகுலை இழந்தது. அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 24 ரன்கள் தேவையாக இருந்தது.
சுப்மன் கில் சதம் அடிக்க 17 ரன்கள் தேவை என்ற நிலையில், அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா 36 வது ஓவரின் கடைசி பந்தில் அதிரடியாக ஒரு சிக்ஸ் அடித்தார். அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு தேவை 18 ரன்கள் என்று ஆனது.
சுப்மன் கில் 17 ரன்கள் எடுத்தால் மட்டுமே சதம் அடிக்க முடியும் என்பதால் பதற்றம் அடைந்த நிலையில், அதுவரை நிதான ஆட்டம் ஆடிய கில், 37வது ஓவரில் அதிரடி ஆட்டம் ஆட முடிவு செய்தார். அந்த ஓவரின் முதல் பந்தில் ஃபோர் அடித்தார்.
அதற்கு அடுத்த பந்தை சிக்சர் ஆக அடிக்க முயற்சித்த நிலையில், பந்து மேலே செல்ல ஜோஸ் பட்லர் அதை எளிதாக கேட்ச் பிடித்தார். இதை அடுத்து சுப்மன் கில் 87 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
கடைசி நேரத்தில் வெற்றிக்கான ரன்னை பற்றி யோசிக்காமல் சதத்தை பற்றி யோசித்ததால் தான் இழப்பு ஏற்பட்டது என்பதால் கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தி அடைந்தார்.
போட்டி முடிந்தவுடன் இது பற்றியும் அவர் சுட்டிக் காட்டியதுடன், கடைசி நேரத்தில் வந்த பேட்ஸ்மேன்கள் ஒருவரை, ஒருவர் முந்த நினைத்ததால் தான் விக்கெட் வீழ்ச்சி ஏற்பட்டது என்று கூறினார்.
இதேவேளை, இந்தப் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.