இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடந்த மெகா தவறு.. தோல்விக்கு காரணம் அதுதான்? டிராவிட் செய்த சொதப்பல்.. 

2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்ற நிலையில் இந்திய அணிக்கு பிட்ச்கள் குறித்த தெளிவு சாதகமாக இருந்தது.

இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடந்த மெகா தவறு.. தோல்விக்கு காரணம் அதுதான்? டிராவிட் செய்த சொதப்பல்.. 

உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தமைக்கு அணியின்  பயிற்சியாளர் ராகுல் டிராவிட் செய்த சொதப்பல் முக்கிய காரணம் என விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்ற நிலையில் இந்திய அணிக்கு பிட்ச்கள் குறித்த தெளிவு சாதகமாக இருந்தது. மேலும், இந்தியா அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான பிட்ச்களை தானே தேர்வு செய்து கொள்வதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் மைதானத்துக்கு சென்று மைதான ஊழியர்களிடம் பிட்ச் குறித்து ஆலோசித்தார். இந்த நிலையில், இறுதிப் போட்டியில் இதுவரை பயன்படுத்தப்படாத பிட்ச்சை தேர்வு செய்து அதில் போட்டி நடந்த வேண்டும் என ஐசிசி பிட்ச் ஆலோசகர் அட்கின்சன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்திய அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ இணைந்து இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்த பிட்ச்சில் தான் இறுதிப் போட்டி நடக்க வேண்டும் என முடிவு செய்து அதை தேர்வு செய்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கின்றது.

அந்த தகவல் உண்மையாக இருந்தால், அந்த பிட்ச் மிகவும் மெதுவான பிட்ச், எளிதாக ரன் குவிக்க முடியாது என்ற நிலையில் அதை ராகுல் டிராவிட் தேர்வு செய்தது ஏன்? என்ற கேள்வி இறுதிப் போட்டி தோல்விக்கு பின் எழுந்துள்ளது.

அந்த மெதுவான பிட்ச்சில் இந்திய வீரர்களால் முதல் இன்னிங்க்ஸில் ரன் குவிக்கவே முடியவில்லை. விராட் கோலி, கே எல் ராகுலால் பெரிய அளவில் பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. 

அதற்கு பதிலாக இதுவரை போட்டி நடைபெறாத புதிய பிட்ச்சில் இந்தியா ஆடி இருந்தால் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் அத்துடன், ராகுல் டிராவிட் பிட்ச்களில் மாற்றம் செய்யுமாறு கூறியது ஊடகங்களில் வெளியானதால் உஷாரான ஆஸ்திரேலிய அணி பிட்ச்சுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொள்வதில் தீவிரம் காட்டியது.

இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்த பிட்ச்சை புரிந்து கொள்வது தான் ஒரே வழி என்ற முடிவுக்கு வந்த அந்த அணி தீவிரமாக செயற்பட்டதுடன், போட்டி முடிந்த பின் மிட்செல் ஸ்டார்க் அது குறித்து பேசி இருந்தார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp