ஐசிசியின் தீர்மானத்தை மதிக்காத பிசிசிஐ! இந்திய அணிக்கு 6 மாதம் தடை?
பிப்ரவரி 16 அல்லது 17ஆம் தேதி நடைபெறும் நிலையில், ரோஹித் பங்கேற்க வேண்டும் என ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதுடள், இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறுகின்றது.
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர், பிப்ரவரி 19ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், ஆரம்பித்ததில் இருந்தே, பிசிசிஐக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையில், பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது.
பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என பிசிசிஐ அறிவித்ததால், 2027ஆம் ஆண்டுவரை பாகிஸ்தான் அணியினர், இந்தியாவுக்கு சென்று கிரிக்கெட் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்த பிரச்சினை முடிந்து, சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய போட்டிகள் அனைத்தும், துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, கேப்டன் பங்கேற்கும் குழு புகைப்படத்திற்காக ரோஹித் சர்மா பாகிஸ்தான் செல்ல மாட்டார் என்ற முடிவில் பிசிசிஐ இருக்கிறது.
கேப்டன் குழு புகைப்படம், பிப்ரவரி 16 அல்லது 17ஆம் தேதி நடைபெறும் நிலையில், ரோஹித் பங்கேற்க வேண்டும் என ஐசிசியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதுடள், இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறுகின்றது.
இந்தநிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கான ஜெர்ஷியில், லோகோவுடன் பாகிஸ்தான் பெயரும் இடம்பெற உள்ள நிலையில், பாகிஸ்தான் பெயர் அல்லாத ஜெர்ஷியைதான் இந்திய வீரர்கள் அணிவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
துபாயில்தான் நாங்கள் விளையாடுகிறோம், பாகிஸ்தானில் நாங்கள் விளையாடவில்லை. அப்படியிருக்கும்போது, சாம்பியன்ஸ் டிராபி லோகோவுடன் பாகிஸ்தான் பெயரை சேர்த்த ஜெர்ஷியை இந்திய வீரர்கள் அணிவது எப்படி சரியாக இருக்கும் என பிசிசிஐ அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ‘‘சாம்பியன்ஸ் டிராபியை வைத்து, பிசிசிஐ முழுக்க முழுக்க அரசியல்தான் செய்கிறது. பாகிஸ்தானுக்கு வரமாட்டோம் என்றார்கள். கேப்டனை அனுப்ப மாட்டோம் என்றார்கள். இப்போது, ஜெர்சியில் திருத்தம் வேண்டும் என்கிறார்கள். ஜெர்சி விவகாரத்தில், ஐசிசி பாகிஸ்தான் பக்கம்தான் நிற்கும் என உறுதியாக நம்புகிறோம்’’ எனத் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது.
இந்த பிரச்சினை குறித்து பிசிசிஐ நிர்வாகிகளை அழைத்து, ஐசிசி நிர்வாகிகள் பேசிய நிலையில், ‘‘சாம்பியன்ஸ் டிராபிக்கு ஐசிசியால் உருவாக்கப்பட்ட லோகோதான் இந்திய வீரர்கள் ஜெர்சியில் இடம்பெற வேண்டும்.
அதில், பாகிஸ்தான் என்ற பெயரும் இருக்க வேண்டும். மீறினால், 6 மாதங்கள் வரை இந்திய அணியை தடை செய்யும் நிலை ஏற்படும். இதற்குமேல் உங்கள் விருப்பம்’’ என ஐசிசி நிர்வாகிகள், பிசிசிஐயிடம் உறுதியாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், சாம்பியன்ஸ் டிராபி லோகோவுடன் பாகிஸ்தான் என்ற பெயரும் இடம்பெறும் ஜெர்சியைதான் இந்திய வீரர்கள் அணிந்து விளையாடுவார்கள் என கூறப்படுகின்றது.