அரையிறுதி கடும் சவாலானது.. அணியில் யாரை சேர்ப்பது... ரோகித்துக்கு ஏற்பட்டுள்ள தலைவலி!
சரியான முறையில் வருண் சக்கரவர்த்தி பந்து வீசினால் அவரை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியம்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வரும் செவ்வாய்க்கிழமை எதிர்கொள்ளும் நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சி வெளிப்படுத்தி இருக்கிறார்.
வெற்றியுடன் லீக் சுற்றை முடிப்பது மிகவும் முக்கியமானதாக இருந்தது என்றும், நியூசிலாந்து அணி எப்போதுமே எங்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு ஸ்ரேயாஸ், அக்சர் பட்டேல் பார்ட்னர்சிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டது மிகவும் ஒரு முக்கியமான விஷயமாகும். இதன் மூலம் நாங்கள் ஒரு நல்ல இலக்கை எட்ட உதவியது.
வருண் சக்கரவர்த்திக்கு வித்தியாசமான திறமை இருக்கிறது. அவர் எப்படி செயல்படுவார் என்பதை பார்க்கத்தான் வாய்ப்பு வழங்கினோம். ஆனால் தற்போது அவர் வீசிய விதத்தை பார்த்து அடுத்த போட்டியில் யாரை சேர்ப்பது என்பது தொடர்பில் ஒரு நல்ல தலைவலி ஏற்பட்டு உள்ளது.
சரியான முறையில் வருண் சக்கரவர்த்தி பந்து வீசினால் அவரை எதிர்கொள்வது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஒரு நல்ல ஆட்டமாக இருக்கும் என நினைக்கின்றேன். எங்களை பொறுத்தவரை செய்ய வேண்டிய விஷயத்தை சரியாக செய்ய வேண்டும். அரை இறுதியில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை இருக்கிறது என ரோஹித் கூறியுள்ளார்.