ரோஹித் எடுத்த அவசர முடிவு.. பதறிய பிசிசிஐ.. இரவோடு இராவாக அறிவிக்கப்பட்ட அணி! இதுதான் காரணம்!
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இரண்டாம் நாளில் தோல்வி அடையும் நிலையில் இருந்ததுடன் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலை காணப்பட்டது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி அவசர, அவசரமாக அறிவிக்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இரண்டாம் நாளில் தோல்வி அடையும் நிலையில் இருந்ததுடன் டெஸ்ட் தொடரை இழக்கும் நிலை காணப்பட்டது.
இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று விட்டதுதுடன், மறுநாளும் நியூசிலாந்து அணி கூடுதல் ரன் சேர்த்து இந்திய அணிக்கு சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி இரண்டாவது நாளின் இரவிலேயே ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி அவசரமாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன், இரவு 10 மணி அளவில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ள டி20 தொடருக்கான அணியும், இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில், நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்ற இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் உள்ளனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துவிட்டால் அதன் பின் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் போது கடுமையான விமர்சனம் எழும் என்பதால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டாக பார்க்கப்படுகின்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சரியாக ஆடாத வீரர்களை இந்திய அணியிலிருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் எனவே அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதாலேயே பிசிசிஐ மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா, துரித கதியில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவித்து இருக்கின்றனர்.
எனினும், நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டால் ரசிகர்களின் எவ்வாறு சந்திப்பார்கள் என்று தெரியவில்லை.