ரோஹித் உள்ளிட்ட மூன்று வீரர்களை நீக்க முடிவு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்

ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் இந்திய அணியில், மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் அவசியம் இல்லை என்பதாலும் அஸ்வின் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரோஹித் உள்ளிட்ட மூன்று வீரர்களை நீக்க முடிவு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்

நவம்பர் 22 ஆம் தேதி துவங்க உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து ரோஹித் உள்ளிட்ட மூன்று வீரர்கள் நீக்கப்படுவார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இருந்து விலக உள்ளதால், அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற மாட்டார். 
அத்துடன், மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற உள்ளனர். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வினை காட்டிலும் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் அதிக விக்கெட் வீழ்த்தி இருந்த நிலையில், ஜடேஜா மற்றும் சுந்தரை பிளேயிங் லெவனில் ஆட வைக்க பிசிசிஐ நிர்வாகம் முடிவு செய்து இருக்கிறது.

இதேவேளை, ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடும் இந்திய அணியில், மூன்று சுழற் பந்து வீச்சாளர்கள் அவசியம் இல்லை என்பதாலும் அஸ்வின் நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேநேரம், நியூசிலாந்து தொடரில் 150 ரன்கள் அடித்த சர்ஃபராஸ் கானையும் அணியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏனென்றால், முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்கள் அடித்தாலும், அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் சரியாக ரன் சேர்க்கவில்லை என்பதுடன், அவர் அவசரப்பட்டு தனது விக்கெட்டை தானே இழந்து வருகிறார். 

அத்துடன்,  அனுபவ வீரர் கே எல் ராகுலை அணியில் சேர்க்க வேண்டியது கட்டாயம் என்பதால், சர்ஃபராஸ் கான் அணியில் இருந்து நீக்கப்பட இருக்கிறார். 
சர்ஃபராஸ் கானுக்கு பதிலாக கே எல் ராகுலும், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரனும் அணியில் இடம் பெற உள்ளனர்.

இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் விவரம்

ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
அபிமன்யு ஈஸ்வரன்
சுப்மன் கில்
விராட் கோலி
கே எல் ராகுல்
ரிஷப் பண்ட்
ரவீந்திர ஜடேஜா
வாஷிங்டன் சுந்தர்
முகமது சிராஜ்
ஆகாஷ் தீப்

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp