எப்போது இந்தியா - பாகிஸ்தான் போட்டி? லீக்கான அட்டவணை.. பிசிசிஐக்கு சிக்கல்!
ஜூன் 12ஆம் தேதி அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணியும், ஜூன் 15ஆம் தேதி கனடா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை குறித்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ளது.
20 அணிகள் பங்கேற்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில், ஒவ்வொரு குரூப்பிலும் 5 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடக்கவுள்ளது.
ஒவ்வொரு குரூப்பிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறுவதுடன், சூப்பர் 8 சுற்று போட்டிகளும் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும்.
அதில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்று இறுதிப்போட்டி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 4ஆம் தேதி தொடங்கும் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 30ஆம் தேதி நடக்கும்.
இந்த நிலையில், லீக் போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி ஜூன் 5ஆம் தேதி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. அதன்பின் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜூன் 9ஆம் தேதி நடக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஜூன் 12ஆம் தேதி அமெரிக்கா அணியை எதிர்த்து இந்திய அணியும், ஜூன் 15ஆம் தேதி கனடா அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டி விடுமுறை நாளான ஞாயிறு கிழமை நடக்கவுள்ளதுடன், இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.
இதேவேளை, டி20 உலகக்கோப்பை தொடர் குறித்த உத்தியோகப்பூர்வ அட்டவணை வரும் திங்கட்கிழமை வெளியிடப்படலாம் என்று கூறப்படுகின்றது.