இரண்டாம் நாள் ஆட்டத்தில் கொட்டப் போகும் மழை.. சிக்கலில் இந்திய அணி... சோகத்தில் ரோஹித் சர்மா!

முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதியுடன் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் கொட்டப் போகும் மழை.. சிக்கலில் இந்திய அணி... சோகத்தில் ரோஹித் சர்மா!

இந்தியா - வங்கதேசம்  அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 1வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று நடக்கவுள்ள 2வது நாள் ஆட்டத்திற்கான வானிலை பற்றிய தகவல்களை பார்க்கலாம்.

ஏற்கனவே முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதியுடன் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி முதல் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், போதிய வெளிச்சம் இல்லாததன் காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதுடன், பின்னர் மழை பெய்ய தொடங்கியது.

மழை விடாத நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால், இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வது முக்கியமானது என்பதால், இந்திய அணி வீரர்களும் ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். 

இந்த நிலையில், 2வது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை அறிவிப்பின்படி 80 சதவீதம் அங்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

அத்துடன், முதல் 3 நாட்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும். 

இந்திய அணி சொந்த மண்ணில் இன்னும் 4 போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளதுடன், இந்த 4 போட்டிகளில் ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால், நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே இருக்கும். 

அதன்பின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மட்டுமே இந்திய அணிக்கு உள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணியின் வெற்றி என்பது சந்தேகமாகவே உள்ளது.

இதனால் சொந்த மண்ணில் நடக்கும் அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இவ்வாறு மழை தொடர்ந்து பெய்தால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும் என்பதால், இதனால் இந்திய அணி ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். 

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...