இந்தியாவுக்கு வில்லங்கமான 5 வங்கதேச அணி வீரர்கள்... பாகிஸ்தான் அணிக்கு வைத்த ஆப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெகதி ஹசன் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கு வில்லங்கமான 5 வங்கதேச அணி வீரர்கள்... பாகிஸ்தான் அணிக்கு வைத்த ஆப்பு!

பாகிஸ்தானை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணத்தில் வீழ்த்தி சாதனை படைத்த வங்கதேச அணி, இதே உத்வேகத்துடன், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சவாலாக இருக்கக்கூடிய ஐந்து வங்கதேச வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

15 ஆண்டுகளில் வங்கதேச அணி முதல் வெளிநாட்டு டெஸ்ட் தொடரை வென்று இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹுசைனின் தலைமைத்துவம் என்றால் அது மிகையல்ல.

அத்துடன், பவுலர்களை சிறப்பாக கையாண்டு எதிரணிக்கு நஜிமுல்க் நெருக்கடி கொடுத்ததுடன், சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்த நஜ்முல் அபார சதம் அடித்திருந்தார். எனினும் அந்தத் தொடருக்கு பிறகு பேட்டிங்கில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை என்றாலும் தலைமைத்துவத்தில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றார்.

இரண்டாவதாக வங்கதேச அணியின் வேக பந்து வீச்சாளராக நஹித் ரானா உள்ளார். 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்தை வீசும் நகித் ராணா, சிவ சந்தர்ப்பங்களில் 150 கிலோமீட்டர் வேகத்தையும் தாண்டி விடுகின்றார். பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

மூன்றாவதாக ஷத்மான் இஸ்லாம் உள்ளதுடன், ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 93 ரன்கள் எடுத்தார். அத்துடன், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் சத்மான் மற்றும் ஜாகிர் ஹசன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு பொறுப்பாக ரன்களை சேர்த்து வருகிறது. 

நான்காவதாக, 24 வயது வீரரான ஹசன் மகமத் குறிப்பிடத்தக்கவர், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 135 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் அதனை ஸ்விங் செய்வதில் சிறந்த வீரராக விளங்குகிறார். 

ஐந்தாவதாக மெஹதி ஹசன் ஏற்கனவே தன்னுடைய திறமையை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராகவே நிருபித்திருக்கிறார். அத்துடன்,  2022 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 

டெஸ்ட் அணியிலும் ஜடேஜாவை கழட்டி விட முடிவு? கவுதம் கம்பீர் போட்ட மாஸ்டர் பிளான்!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெகதி ஹசன் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சகிபுல் ஹசன் தற்போது நல்ல பார்மில் உள்ளதுடன், இந்தியாவுக்கு எதிராக அபாரமாக விளையாடி வருகிறார். இதனால் வங்கதேச அணி இந்த அணிக்கு சவாலான போட்டியை கொடுக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...