மழையே இல்லை... ஆனாலும் ரத்தான இந்தியா - கனடா போட்டி... ரசிகர்கள் விளாசல்!
இந்தியா மற்றும் கனடா அணி வீரர்களும் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் மைதானத்தின் ஒரு ஓரத்தில் கால்பந்து விளையாடினர்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான குரூப் சுற்று போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியா - கனடா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஃபுளோரிடா மைதானத்தில் நடக்கவிருந்தது.
ஆனால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்ததால், பிட்ச் மற்றும் மைதானத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், திட்டமிட்டபடி 7.30 மணிக்கு டாஸ் போடப்படவில்லை.
இந்தியா மற்றும் கனடா அணி வீரர்களும் போட்டி நடக்குமா என்ற சந்தேகத்தில் இருந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் மைதானத்தின் ஒரு ஓரத்தில் கால்பந்து விளையாடினர்.
ரோஹித் சர்மாவை காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா... இவர் மட்டும் இல்லைனா காலி!
இதனிடையே மைதான பராமரிப்பாளர்கள் மைதானத்தில் இருந்து ஈரத்தையும் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் 9 மணிக்கு மீண்டும் நடுவர்கள் சோதனை செய்த போது, ஆட்டம் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தெரியவந்தது. இதன்பின் இரு அணிகளின் கேப்டன்களுடன் ஆலோசித்த நடுவர்கள், போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.
ஏற்கெனவே ஃபுளோரிடா மைதானத்தில் நடக்கவிருந்த இலங்கை - நேபாளம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், அமெரிக்கா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
கனமழை பெய்யும் போது வழக்கமாக மைதானத்தின் அனைத்து பகுதிகளும் தார்பாய் வைத்து மூடப்படும் நிலையில், ஐசிசி நடத்தும் டி20 உலகக்கோப்பை தொடரில் மழை பெய்தாலும் கூட மைதானம் முழுமையாக மூடப்படவில்லை இதனால் ரசிகர்கள் ஐசிசியை விளாசி உள்ளனர்.