தவறான முடிவெடுத்த இந்திய அணி... ஆரம்ப நாளிலேயே ஆப்பு வைத்த ஜோ ரூட்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் முதல் நாளில் இந்திய அணி சொதப்பியுள்ளது.

தவறான முடிவெடுத்த இந்திய அணி... ஆரம்ப நாளிலேயே ஆப்பு வைத்த ஜோ ரூட்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஆடி வரும் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் முதல் நாளில் இந்திய அணி சொதப்பியுள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணி  வீரர் ஜோ ரூட் சதம் அடித்த நிலையில், இங்கிலாந்து அணியின் கை ஓங்கி உள்ளது.

முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2 -1 என முன்னிலையில் இருக்கும் நிலையில், இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளரான பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து அணி  வீரர் ஜோ ரூட் விக்கெட்டை தொடர்ந்து பும்ரா வீழ்த்தி வந்ததுடன், அவரின் பந்துவீச்சை சமாளித்து ஆடுவதில் ஜோ ரூட்டுக்கு பிரச்சனை இருந்தது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் 25 ஓவர்களில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. ஆனால், களத்தில் இருந்த ஜோ ரூட், மற்ற இங்கிலாந்து வீரர்கள் போல அதிரடி ஆட்டம் ஆட முயற்சி செய்யாமல் நிதானமாக ஆடினார். 

5 விக்கெட் வீழ்ந்ததால் ஏழாம் வரிசையில் இறங்கிய பென் ஃபோக்ஸ், ஜோ ரூட் வழியை பின்பற்றி நிதான ஆட்டத்துக்கு மாறினார்.

அதனால், இந்திய அணியால் விக்கெட் வீழ்த்த முடியாமல் போனதுடன் பென் ஃபோக்ஸ் 126 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

டாம் ஹார்ட்லி 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க ஒன்பதாம் வரிசையில் இறங்கிய ஒல்லி ராபின்சன் 60 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 

ஜோ ரூட் தன் 31வது டெஸ்ட் சதம் கடந்த நிலையில், பும்ரா இல்லாதது ஒரு வகையில் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்துள்ளதுடன், இரண்டாம் நாளில் இருந்து ராஞ்சி பிட்ச் சுழற் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்படுவதால் இந்திய அணி பெரும் சிக்கலில் உள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...