ராகுல் டிராவிட் என்ன சொன்னார் தெரியுமா? நம்பி ஏமாந்த இங்கிலாந்து கேப்டன்... வேதனையில் பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி செய்த ஒரு விஷயத்தை நம்பி ஏமாந்து இருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
போட்டிக்கு முன்னதாக பேட்டி அளித்த இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்றும், ஆனால், எப்போதிருந்து ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் எனத் தெரியாது என்று கூறி இருந்தார்.
அதை நம்பி மூன்று ஸ்பின்னர்கள் மற்றும் ஒரு வேகப் பந்துவீச்சாளரை மட்டும் வைத்துக் கொண்டு இங்கிலாந்து அணி களமிறங்கியது.
முதலில் பந்து வீசிய இந்திய அணி அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேலை வைத்து விக்கெட்டை வீழ்த்தியது. அப்போதும் கூட பிட்ச் முழுமையாக ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பது போலவே இருந்தது.
இப்படி நடந்ததே இல்லை.. 147 வருட வரலாறு.... ஆப்பு வைத்துக் கொண்ட இங்கிலாந்து அணி!
அடுத்து இந்திய அணி பேட்டிங் ஆடிய போது இங்கிலாந்து அணி ஸ்பின்னர்களை பந்து வீச வைத்தாலும், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில், பிட்ச் மெதுவாக இருந்ததே தவிர ஸ்பின் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்கவில்லை என்பது தான் உண்மை என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அனுபவம் வாய்ந்த இந்திய ஸ்பின்னர்கள் மெதுவான பிட்ச்சில் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீசி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணற செய்தனர்.
ஆனால், இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு இது பற்றிய அனுபவமின்மையால் அவர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
இந்திய அணியைப் பார்த்து மூன்று ஸ்பின்னர்களை அணியில் தேர்வு செய்தால் வெற்றி பெற்று விடலாம் என நம்பி இங்கிலாந்து அணி ஏமாந்து இருக்கிறது.
எனினும், மூன்றாவது நாளில் இருந்து ஹைதராபாத் பிட்ச் ஸ்பின் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என கூறப்படுகிறது.