சிக்கலில் கேப்டன் ரோஹித் சர்மா.. இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்! என்ன செய்ய போகிறார்?

நியூசிலாந்து தொடரின் மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது.

சிக்கலில் கேப்டன் ரோஹித் சர்மா.. இந்திய அணிக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்! என்ன செய்ய போகிறார்?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளையும் வெற்றிப்பெற வேண்டிய கட்டாயத்தில் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளார்.

ஏனென்றால், அடுத்து நடக்க உள்ள ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது இந்திய அணிக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு ரோஹித் சர்மா மீதே விமர்சனங்கள் வைக்கப்படும்.

இதனால், நியூசிலாந்து தொடரின் மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து மூன்று போட்டிகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என இந்திய அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக முக்கிய காலமாக இது அமைந்துள்ளது.

இந்தியா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எட்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்தால் இறுதி போட்டிக்கு முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளதுடன், அவர் சொந்த காரணங்களால் விலக உள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்தியாவின் இடம் 99 சதவீதம் உறுதியாகிவிடும்.

அதன்பின்னர் நடக்கவுள்ள, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான அழுத்தம் இன்றி விளையாடலாம். 

எனவே, தன்னால் இந்திய அணிக்கு அழுத்தம் ஏற்பட்டு விடக்கூடாது என ரோஹித் சர்மா நியூசிலாந்து தொடரின் மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்ற அழுத்தத்துடன் இருக்கிறார்.

முன்னதாக நியூசிலாந்து அணி, இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி, இரண்டிலும் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது.