இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய மாற்று திறனாளி அணி!

இலங்கையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் பலப்பரிட்சை நடத்தியது.

இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது இந்திய மாற்று திறனாளி அணி!

இலங்கையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் பலப்பரிட்சை நடத்தியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. 

இந்திய அணியின் யோகேந்திரா 40 பந்துகளை எதிர்கொண்டு நான்கு பவுண்டரிகள், 5 சிக்சர்கள் அடங்களாக 73 ரன்கள் சேர்த்தார்.  இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 182 என்ற அளவில் இருந்தது.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதலில் தடுமாறியதுடன், 118 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 79 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மாற்றுத்திறனாளிகள் அணி வெற்றி பெற்றது. 

பந்துவீச்சு தரப்பில் ராதிகா பிரசாத் 3.2 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் விக்ராந்த் 15 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டு களையும் ரவீந்தரா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் விக்ராந்த், “இந்த கோப்பை எங்களுக்கானது மட்டுமல்ல. இந்தியாவில் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசையில் இருக்கும் உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளி நபர்களும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆசையில் இருக்கும் அனைவருக்குமே இதை நாங்கள் அர்ப்பணிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp