தோற்க வேண்டிய போட்டியில் இந்திய அணி வெற்றி... இறுதிகட்ட டுவிட்ஸ்... இரண்டு பேர்தான் காரணம்.. பிசிசிஐ மகிழ்ச்சி!

இலங்கை அணியுடனான போட்டியில் தோற்கும் நிலையில் இருந்த இந்திய அணியை வெற்றி பெற செய்ததால் கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் குறித்து பிசிசிஐ மகிழ்ச்சியடைந்துள்ளது.

தோற்க வேண்டிய போட்டியில் இந்திய அணி வெற்றி... இறுதிகட்ட டுவிட்ஸ்... இரண்டு பேர்தான் காரணம்.. பிசிசிஐ மகிழ்ச்சி!

இலங்கை அணியுடனான போட்டியில் தோற்கும் நிலையில் இருந்த இந்திய அணியை வெற்றி பெற செய்ததால் கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் குறித்து பிசிசிஐ மகிழ்ச்சியடைந்துள்ளது.

ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டியில் ஓய்வு பெற்ற நிலையில், டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தேர்வு செய்தார்.

துணை கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை புறக்கணித்துவிட்டு அவர் இந்த முடிவை எடுத்தபோது பலரும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

எனினும், கம்பீர் மீது நம்பிக்கை வைத்து, இதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி விளையாடியது.

முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை 2 - 0 என இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்றாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, இந்தியா 137 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இலங்கை அணி 15 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. 

அத்துடன், கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் இலங்கை அணிக்கு வெற்றி என்ற நிலை காணப்பட்டபோது, கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இணைந்து வித்தியாசமான முடிவுகளை எடுத்து இந்திய அணியை வெற்றி பெறசெய்தனர்.

கடைசி இரண்டு ஓவர்களில் 9 ரன்கள் எடுத்தால் இலங்கை அணி வெற்றி பெறும் என்ற நிலையில் ரிங்கு சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ் அந்த இரண்டு ஓவர்களை வீசினார்கள்.

ரிங்கு சிங் மூன்று ரன்களும், சூர்யகுமார் யாதவ் 5 ரன்களும் மட்டுமே விட்டுக் கொடுத்ததுடன், இருவரும் சேர்ந்து 4 விக்கெட்களை வீழ்த்தி போட்டியை டை செய்தனர். 

அடுத்து சூப்பர் ஓவரில் இலங்கை இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்தியா எளிதாக வெற்றி பெற்றது.

தோல்வி அடைய வேண்டிய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை பார்த்து பிசிசிஐ அதிகாரிகள் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவை பாராட்டி உள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...