இந்திய அணிக்கு சாதகமாக மாறிய விதி.. இனி இந்திய ரசிகர்களுக்கு அந்த தேவையே இல்லை!
இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் சீசன் முடிவடைந்தவுடன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் இரண்டாம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நினைத்த நேரத்திற்கு மழை பெய்யும் என்பதால் போட்டி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஐசிசி, சில மாற்றங்களை மேற்கொண்டு உள்ளது.
அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றால் இரண்டாவது அரையிறுதியில் தான் விளையாடும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.
முதல் அரையிறுதி இந்திய நேரப்படி ஜூன் 27 ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும், இரண்டாவது அரை இறுதி போட்டி ஜூன் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு நடைபெறும்.
இதனால், இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று முதல் அரை இறுதி போட்டிமழையால் பாதிக்கப்பட்டால், ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும் இந்தியா விளையாடப் போகும் அரையிறுதிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்படவில்லை.
மாற்றாக அதே நாளில் போட்டியை நடத்தி முடிக்க கூடுதலாக நான்கு மணி நேரம் வரை அதிகரித்து போட்டியை நடத்தி முடிக்கலாம் என்று ஐசிசி கூறியுள்ளது.
இறுதிப்போட்டி 29ஆம் தேதி நடைபெறுவதால் 28ஆம் தேதி ரிசர்வ் டே வைத்தால் வீரர்களுக்கு ஓய்வு இருக்காது என்பதால், ரிசர்வ் டேவை இரண்டாவதாக இறுதியில் இருந்து நீக்கிவிட்டு அதே நாளில் போட்டியில் நடத்தி முடிப்பதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதனால், மழை பெய்தாலும் சுமார் எட்டு மணி நேரம் வரை போட்டியை நடத்த நேரம் உள்ளதுடன், குறித்த நாளில் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தற்போது கணிக்கப்பட்டு உள்ளது.
ஒருவேளை, மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் சூப்பர் 8 சுற்றில் யார் முன்னிலையில் இருக்கிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.