கோலி, ரோஹித்தை முந்தி இந்த வருடத்தில் அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர் யார் தெரியுமா?

அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர்: இந்திய அணி மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் இந்த வருடத்தில் ஆடி 27 வெற்றிகள், 7 தோல்விகள் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி கைவிடப்பட்டது. 

கோலி, ரோஹித்தை முந்தி இந்த வருடத்தில் அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர் யார் தெரியுமா?

 அதிக சம்பளம் வாங்கிய இந்திய வீரர்

இந்திய ஒருநாள் அணியில் இடம் பெற்ற வீரர்களில் 2023 ஆம் ஆண்டு  அதிக சம்பளம் வாங்கிய வீரர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளதுடன், அந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் மூன்றாவது இடத்தில் தான் உள்ளனர். 

இந்த நிலையில், சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் அதிக ஒருநாள் போட்டிகளில் ஆடியதன் காரணமாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை விட கூடுதல் சம்பளம் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணி மொத்தம் 35 ஒருநாள் போட்டிகளில் இந்த வருடத்தில் ஆடி 27 வெற்றிகள், 7 தோல்விகள் பெற்றுள்ளதுடன், ஒரு போட்டி கைவிடப்பட்டது. 

குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 30 போட்டிகளில் ஆடி இருக்கிறார். பிசிசிஐ ஒரு போட்டிக்கு சம்பளமாக 6 லட்சம் நிர்ணயித்துள்ளது. அதன்படி குல்தீப் யாதவ் 1.80 கோடி ஒருநாள் போட்டிகளில் ஆடியதன் மூலம் சம்பளம் பெற்றுள்ளார்.

அணியின் துவக்க வீரர் சுப்மன் கில் 29 ஒருநாள் போட்டிகளில் ஆடியதன் மூலம் 1.74 கோடி சம்பாதித்து இருக்கிறார்.  மூன்றாவது இடத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் உள்ளனர். அவர்கள் மூவரும் 27 ஒருநாள் போட்டிகளில் ஆடி 1.62 கோடி சம்பாதித்து உள்ளனர்.

  1. குல்தீப் யாதவ் - 1.80 கோடி
  2. சுப்மன் கில் - 1.74 கோடி
  3. ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் - 1.62 கோடி
  4. ரவீந்திர ஜடேஜா - 1.56 கோடி
  5. முகமது சிராஜ் - 1.50 கோடி
  6. சூர்யகுமார் யாதவ் - 1.26 கோடி
  7. ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா - 1.20 கோடி
  8. முகமது ஷமி - 1.14 கோடி
  9. ஜஸ்பிரித் பும்ரா, இஷான் கிஷன் - 1.02 கோடி
  10. ஷர்துல் தாக்கூர் - 96 இலட்சம்

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp