இந்த இந்திய வீரர்களால் இரட்டை சதம் அடிக்கவே முடியாது... ஓபனாக சொன்ன நியூசிலாந்து வீரர்!

இந்திய மைதானங்களை விமர்சிப்பது நியாயம் கிடையாது. நியூசிலாந்தில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின்போதும், 15-18 மி.மீ பச்சை புற்களை உருவாக்குவது வழக்கம். 

இந்த இந்திய வீரர்களால் இரட்டை சதம் அடிக்கவே முடியாது... ஓபனாக சொன்ன நியூசிலாந்து வீரர்!

இந்திய மண்ணில் இங்கிலாந்து அணி 2012ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. அதன்பிறகு, இந்திய மண்ணில் எந்த அணியும் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது கிடையாது. 

இந்நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு, இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் நோக்கில், இங்கிலாந்து அணி, இந்தியா வந்துள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத் பிட்சில், சுழல் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக, துவக்கம் முதலே சுழல் இருந்ததால், இங்கிலாந்து அணி 9ஆவது ஓவரிலேயே ஸ்பின்னரை பயன்படுத்தத் துவங்கியது. 

முன்பு இருந்த காலகட்டத்தில், இந்திய மண்ணில் முதல் இரண்டு நாட்களுக்கு பிறகுதான், சுழல் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது, முதல்நாள் முதல் செஷனில் இருந்தே பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தது.

சமீப காலமாக இந்தியா, தங்களுடைய சொந்த மண்ணில் வெல்வதற்காக வேண்டுமென்றே பிட்சை சுழலுக்கு சாதகமாக மாற்றிவிட்டது என வெளிநாட்டு கிரிக்கெட் விமர்சகர்கள், அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

ஆனால், தென்னாப்பிரிக்கா போன்ற பிட்ச்களில் மட்டும் வேகத்திற்குச் சாதகமான பிட்ச் அமைக்கப்படுகிறது, இதனை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்வது என இந்திய கிரிக்கெட் விமர்சகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள நியூசிலாந்து அணி முன்னாள் வீரர் சைமன் டௌல், சுழலுக்கு சாதகமான பிட்ச்களை உருவாக்கி, அதில் இந்தியா வெற்றியைப் பெறுவது தவறில்லை என பேசியுள்ளார்.

அதில், ''இந்திய மைதானங்களை விமர்சிப்பது நியாயம் கிடையாது. நியூசிலாந்தில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின்போதும், 15-18 மி.மீ பச்சை புற்களை உருவாக்குவது வழக்கம். 

இதனால், முதல் ஒன்றரை நாள் வேகப்பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இதனால்தான், நியூசிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளை வெல்கிறது. இதனால், இந்தியா தாங்கள் விரும்பும் வகையில் பிட்சை தயார்செய்து விளையாடுவதை பற்றி எனக்கு கவலை இல்லை'' எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ''முதல் நாள், முதல் செஷனில் இருந்து பந்துகள் சுழல்கிறது. அதுகுறித்து நான் கவலைப்பட மாட்டேன். இந்த சூழ்நிலையில், நவீன பேட்டர்கள் எப்படி அசத்துவார்கள்? குறிப்பாக ஜெய்ஷ்வால், ஷுப்மன் கில் போன்றவர்கள் இப்படிப்பட்ட பிட்ச்களில் இரட்டை சதம் அடிக்கவே முடியாது. 
சச்சின், டிராவிட், சேவாக், லக்‌ஷ்மன் ஆகியோரைபோல 55, 52 என்ற சராசரியை தக்கவைக்க வாய்ப்புகள் மிகமிக குறைவுதான்'' எனத் தெரிவித்தார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp